அவள் - தேடல்

உண்மையென்று உரைக்க உதடு துடிக்க
உள்ளதை சொல்லென்று உள்ளம் வெடிக்க

பாவம் தனிமை என்னை தேடுகிறது
உன்னிடம் சிறைப்பட்டதை அறியாமல்

நாள் முழுக்க பேசியதை
நாள் முடிந்தும் நினைக்கிறேன்...

விரும்பி வந்த விடுமுறை கூட எரிகிறது
நீ இல்லாத வெறுமையால்...

உடல் நலமிழக்க வேண்டுகிறேன்
அவள் விசாரிப்பாள் என்பதற்காக

கண்கள் மூடி தேடுகிறேன் ஒளியை
தேட வேண்டுமா திறக்க வேண்டுமா தெரியவில்லை..

வெளிச்சத்தில் மறைந்து
கண்ணாமூச்சி ஆடுகிறேன்..
என்னை கண்டெடு என் கவியே...

Topic: அவள் - தேடல்

Date: 25/10/2011

By: Kanthi

Subject: Feedback

....Wowwwwwwww